பார்த்தாயா? கோத்தபாய பிள்ளைகளின் பகிடிக் கதை கேட்டாயா?
எந்த விமானம் வந்து அடித்தது?
ஏறி வந்தவர் எக்காளம் இடும் கோட்டை;
ஒன்றரை மணித்தியாலம் ஒளியிழந்து போனதவர் வீடு;
வண்டா பறந்து வந்து போனது ?
பண்டா பயந்து பதுங்கிப் படுக்கையில்;
வாய்ப் பேச்சுச் சிங்களவர் வாய்கள் பிளந்தது;
பார்த்தாயா? கோத்தபாய பிள்ளைகளின் பகிடிக் கதை கேட்டாயா?
காட்டுக்குள் புலிகள் பதுங்கி விட்டாராம்;
வெகு விரைவில் புலிகள் தலைவன்!
எம் புயலைப் பிடிப்பாராம்!
ஆருக்குச் சொல்லுகிறார் அலரி மாளிகையின்,
அண்ணன் தம்பிமார்கள் இவர்;
வெட்கம் கெட்ட வெறுவாய் சப்பும்
வெறும் பிச்சைப் பேய்கள் இவர்;
ஆப்பிழுத்து ஆடுகின்ற அலரிமாளிகையின்,
குகை வாழும் குரங்குகளே!
பிரணாப் முகர்ஜி வருவார்!
புலிகள் விமானம் வீழ்த்த
புதுப் பீரங்கி கேளுங்கள்;
அவர்கள் தான் உங்களுக்கு இந்திரா
ராடர் செய்து தந்த வீரர்கள்; பிரபாகரன் பிடிக்க!
பிடிப்பீர்கள் நீங்கள் தான்!
வாயடிக்கும் வள்ளல்கள் தான் ஆச்சே;
வம்சமுடன் வந்து ஊளையிடுகிறீர்கள்; -
எமைக் கொன்று குவித்து கும்மாளம் அடித்து,
அண்ணன் தம்பிகளாய் அலரி மாளிகையில்!
எம் வால்பிடிக்க நினைத்து - நீர்
வாங்கிக் கட்டியது ஏராளம்!
நீங்கள் என்ன எம் வாசல் வந்தா எமைப் பிடிப்பீர்கள்?
வாருங்கள்! வாருங்கள்!
நீங்கள் தான் எமைப் பிடித்த சனியன் என்றாச்சு!
நாளைக்குப் பிடிப்போம்! நாளைக்குப் பிடிப்போம்!
என்றே செத்துத் தொலையுங்கள்!
எம் வாசல் தலைவன் வாகை சூடும் வரை நூறாய் வந்திங்கு;
வாருங்கள்! வாருங்கள்!
நாளைக்குப் பிடிப்பீர்கள்! நாளைக்குப் பிடிப்பீர்கள்!
எலிகளைத்தான்; எம்மையில்லை;
தாயான தலைவன் எங்கள்தமிழ் மானம் எரிக்கும் வரை;
நீங்கள் வாருங்கள்! வாருங்கள்!
தாகம் என நின்ற தமிழீழ "வீரர்" தோகை மயிலாட;
தொலைவீர்கள் ஒவ்வொன்றாய்!
கோரம் எமை எரித்தபோதும் கோலம் தொலையாமல்
மண்ணில்; ஈரம் இருக்கும் வரை ஓயோம்!
உமை எரிப்போம்!
சிங்களரே! வாருங்கள்! வாருங்கள்!
நீங்கள் தான் எமைப் பிடித்த சனியன் என்றாச்சு!
முந்தித்தான் மூதேவிகளைப் பார்த்து அழுதோம்!
காட்டிக் கொடுத்தார்;
எம்முள் பிறந்தும்; எம்முள் தவழ்ந்தும்; எம்முள் வளர்ந்தும் என!
இப்போது நாம் அழுவதில்லை!
அழிவார்கள் அவரும் ஒருநாள் என
அவர் ஓலம் எமை ஆற்றும்!
பல் இளிக்கும் இந்தப் பரதேசிகளும்;
பாடை ஏறும் காலமது கணியுமேன்றும்,
கை வீசி நடக்கின்றோம்!
முதல் கூறு முடிந்ததென்று; - எமைப் பிடித்த சனியன்
இடைக் கூறும் கடந்ததென்றும் இருந்துவிட்டு;
கடைக்க கூறில் நின்றென்ன கண்ணீரா நாம் வடிப்போம்?
சாவா வரும் எமக்கு - அட
சங்கதியா சிங்களர்க்கு!
சங்கடமா எங்களுக்கு!
வந்த சனியனை கொன்று மிதித்து கூத்தாட மாட்டோமா?
வெந்து கருகி வேதனையால் நாம் அழுதால் வந்து பார்ப்பார் எவர்?
என்றோ வாய் பிளப்போம் நாங்கள் என!
வெள்ளை மாளிகை முன் அழுதால் வெல்வோமா?
சிதறிய என் பிள்ளை சிறகுகள் தான் முளைத்து எழுமா?
பதறி அழ என் அன்னை சிங்களவன்
குதறிய கோரம் இங்கென்ன கும்பிடுமா?
இருகரமும் அறுத்தெறிவேன்;
இல்லையென்றால் வெற்றியடா!
ஈனர் எமைக் கொன்று விட்டு இருந்து விட்டால்;
என் வீட்டில் எரிந்திடுவேன்!.......
பூத்த கொடியெலாம் கருகியதாம்;
பொழிந்த நிலவெலாம் இருண்டதுவாம்;
துள்ளிக் குதித்த கன்றுக் குட்டிகள்
துவம்சமாகிக் கிடக்கிறதாம்!
வெள்ளைப் பாலும் சிவப்பாய் மாறிச்
சிவக்க மண்ணும் சிரிக்கிறதாம்!
மின்னல் இடியும் மழையும் கொஞ்சம்
தன்னுள் கூசி அழுகிறதாம்!
என்ன கோலம் எதற்காய் என்றே
தன்னுள் கேட்டே கலைகிறதாம்!
இன்னும் பொறுத்திரு, இன்னும் பொறுத்திரு, - என்றே
இமயம் நெருப்பாய் வீசி எரிகிறதாம்!
எழுதும் பேனா முனையும் நடுங்கி
எனையும் மெல்லத் தின்கிறதாம்!
வெல்லத் தலைவன் வேகம் கொள்ள
வேண்டி மெல்லக் கசிகிறதாம்!
அள்ளும் கிணறும் அலைகள் கொள்ள
எல்லாம் புலியாய்ப் போனதுவாம்!
வெல்லத் தலைவன் வேதம் நின்று
வேண்டி ஆகுதி நின்றதுவாம்!
வாழ்க! வாழ்க! எங்கள் தலைவனே! -
வரலாறு தந்த எம்புத்தகம்
எம் புகழ்; வித்தகம் வீரனே!
உன் நெருப்பு நிழலில் நின்று சாகினும்
எம் விருப்பு வேண்டுதல் ஆகிப் போகிறோம்!
மாற்றார் செருப்பு நாமில்லை தலைவனே!
உன் புகழ் விருப்பு என்று நாம்;
எழுதுகிறோம்!
எழுகிறோம்!
எரிகிறோம்!
Tuesday, August 11, 2009
Subscribe to:
Posts (Atom)